
மிதிபலகையை மாற்றி மிதிக்கையில்,
மிதிபட்ட தன் வாழ்க்கையை சிந்திக்க நேரமில்லை.
உடுத்த ரெண்டு சேலைக்கு மேல் இல்லாமல்,
ஊருக்கு புடவை வழங்குவதற்கு நெய்து கொண்டு இருக்கிறாள்.
காதல் வாழ்வும் இவளுக்கு உண்டு,
கணவனும் கடும் நெசவாள உழைப்பாளிதான்
பரம்பரை சண்டைகளில், பாதி நேரம் கழிய
மீத நேரம் காதலின் ஊடல்.
கல்யாணம் கைதட்டி நிறைவேறியது*.
ஊரைவிட்டு ஓடிப்போனதால்.
காதல் கூடிய தெம்போ அல்லது குடும்ப நிலயோ
எதுவோ விரைவாக சேலையை நெய்து கொண்டு இருக்கிறாள்.
வாங்கும் சம்பளம் திங்களன்றே பங்கிட்டு கொடுத்தபின்
மீத, பற்றாக்குறைக்கு மறுபடியும் கைமாத்து வாங்குவாள்.
மருத்துவ செலவுக்கு நிலமெல்லாம் விற்றது போக
மிஞ்சியது ஏதும் இல்லை தரித்திரம் தவிர.
வறுமைக்கு வாக்கபட்டதாலோ என்னவோ
கஷ்டம் இவள் மீது ஒரு தலை காதலுடன்
எப்போதும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது
நல்லவேளை கணவன் குடிகாரனில்லை
பின் எப்படி மாண்டான் சிறு நீராக நோயால்?
இளம் விதவை, ஊரின் மைனர்மாருக்கெல்லாம் கொண்டாட்டம்
இங்கேயோ சொந்தங்களுக்கு திண்டாட்டம்
என்ன செய்வது வீட்டு ஆளுகளை எதுத்து கல்யாணம் செஞ்சாலும்
அவ நம்ம வீட்டு புள்ள இல்லையா?
அதுக்க்காகவா? இல்ல இவ இப்படி இருந்தா கேட்டு
குடும்பமானம் போயிடும்னா ? எப்படியோ வீட்டுக்குள்ள சேத்துகிட்டாங்க.
ஆனா பிழைப்பு மட்டும் அதே தான்,
மாரிமுத்து இப்பவும் மனசுக்குள்ள மஞ்சத்துல இருக்கான்
பலகையை மாற்றி போட்டு நெய்ய ஆரம்பிக்கையில்
மாறிப்போன தன் வாழ்க்கை இங்கே நினைவில்லை
வேற எடத்துல கவனம் இருந்தா, சீலையில் தத்தியல் (குறைபாடு) ஏறிவிடும்
குறை இல்லாம நெஞ்சதனால தான் குறைஞ்சு போச்சா வாழ்க்கை தரம்.
அவர் முகம் பாக்க குழந்தையும் இல்லை
அவள் வாழ்கையை ரசிக்க இந்த உலகில் எதுவும் இல்லை.
வெள்ளைசேலைக்கும், திருநீருக்கும் என்றுமே உலகில் பஞ்சமில்லை
இவள் ஆடை நெய்த போதும் யாரும் சகுனம் பார்ப்பதில்லை
( *யாரும் குடும்பத்தை மீறி மணக்க நேரின் மேளம் இன்றி மிக எளிமையாக கைதாளத்துடன், மிட்டாய் வழங்கப்பட்டு முடியம் கல்யாணம்)


அங்கே போட்டு இங்கே கூப்புட்டீக
பதிலளிநீக்குகல்யாணம் கைதட்டி நிறைவேறியது*.
பதிலளிநீக்குஊரைவிட்டு ஓடிப்போனதால்
நமதும் அப்படியே
பின்னர் பெற்றோர் ஒத்து கொண்டனர்
\\இளம் விதவை, ஊரின் மைனர்மாருக்கெல்லாம் கொண்டாட்டம்
பதிலளிநீக்குஇங்கேயோ சொந்தங்களுக்கு திண்டாட்டம்\\
:(((
\\வெள்ளைசேலைக்கும், திருநீருக்கும் என்றுமே உலகில் பஞ்சமில்லை
பதிலளிநீக்குஇவள் ஆடை நெய்த போதும் யாரும் சகுனம் பார்ப்பதில்லை\\
நெஞ்ச தொட்டுட்டீங்க ...
இந்த வரிகள் - மிகவும் கணம் தாங்கிய ரனம்
காதல் திருமணம் செய்த நம் நண்பர் குழாம் உறுப்பினர் அதிரை ஜமால் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஉடனே ஒருஜினல் லிங்க் வந்து பின்னோட்டமிடும் பண்பிற்கு கோடி வந்தனங்கள். எண்கள் ஊர் செய்திகள் இப்படித்தான் நாடாவோடும் நூல்களோடும், சீலைகளோடு கழிகின்றன . தங்கள் பின்னோட்டம் எனக்கு சாயமேற்றிய மகிழ்ச்சி . மீண்டும் வருக
//மிதிபலகையை மாற்றி மிதிக்கையில்,
பதிலளிநீக்குமிதிபட்ட தன் வாழ்க்கையை சிந்திக்க நேரமில்லை.//
கவிதையின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து விட்டீர்கள்.
கொஞ்சம் உருக்கமாக இருந்த்து.
நன்றி நண்பரே !!!!!!
வாருங்கள் அ.மு.செய்யது அவர்களே,
பதிலளிநீக்குதங்கள் வரவுக்கு நன்றி.
//கவிதையின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து விட்டீர்கள்.
கொஞ்சம் உருக்கமாக இருந்த்து.
நன்றி நண்பரே //
இந்தகைய நிகழ்வுகள் என் வாழ்க்கை நினைவுகள், என் பள்ளி பருவ நினைவுகள். இந்த பெண் போல பலர் உள்ளனர்.
தங்கள் வரவுக்கு நன்றி. மீண்டும் வருக
Hi,
பதிலளிநீக்குWe have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com. Please check your blog post link here
Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Thanks
Valaipookkal Team
புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.
தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://www.bogy.in
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in