சனி, 13 டிசம்பர், 2008

கவிதை 1


மெல்லினமே உன்
இடையினத்தை
காட்டி
வல்லினம் என்னை தாக்கினாய்

*****************************************************

உன் கண்களால் என் இதயத்தை உடைத்தாய்
உன்
பேச்சால் என் லட்சியங்களை உடைத்தாய்
பின்
ஏன் உன் தந்தையிடம் கூறி என் எலும்புகளை உடைத்தாய்?

**********************************************************

ஹைக்கூ 1


மீசை இருந்தாலும்
ஆண்மகன் இல்லை
கரப்பன்
பூச்சி

******************************************************

பச்சையம்
இழந்த இலை
இன்னும் உதிராமல்
இளம் விதவை


*******************************************************

என்ன
முயன்றும் தோல்விதான்
இந்த
தேனீக்கு
பிளாஸ்டிக் ரோஜா

********************************************************


காய்த்த
மரம் கல்லடிபடும்
என்னை
ஏன் அடிக்கிறார்கள்?
யோசனையுடன்
ஓடும் நாய்

*********************************************************

பனித்துளியை தாங்கும் என் ரோஜா


பனித்துளியை இலையில் தாங்கும் புல் போ
தண்ணீர் குடத்தை இடையில் தாங்கி வருகிறாய்.

கால்களின்
விலங்குபோல வெள்ளி கொலுசு
ஆணவமாக சத்தமிட்டு உலக அமைதியை கலைக்கின்றன.

நானும்
நீயும் நேருக்கு நேராக நீயும் நானும் நோக்குகையில் நான் உன் கண்ணையும் நீ என் கண்ணையும் பார்வையால் தாக்க ஆரம்பிக்கிறோம்

நீ
ஒரு வழியில் விலக, அனிச்சை யாய்என் பாதங்களும்
அதே
பாதையை தேர்ந்தெடுக்க

உடனே
மறு வழியில் உன் பாதம் பதிக்க,
நானும்
வேண்டுமென்றே என் கால்களை அதே வழியில் செலுத்த,

இக்கட்டு
உருவாக்க மவுனம் வழிய ஆரம்பிக்கிறது, நீயும் நானும் வேறு வழியின்றி மாற்று வழி தேர்ந்தெடுக்க

நீ
பாதையில் நடக்க ஆரம்பிக்க, என் நெஞ்சில் பூ பூக்க ஆரம்பிக்கிறது
சபிக்க ஆரம்பிக்கிறது உன் காலடி படாத மண் துகள்கள்.

மறு
படியும் வெற்று குடத்துடன் திரும்பி வருகிறாய்,
என்
பார்வை மறுபடியும் உன் கண் மேய,

நீயோ
என் உணர்வு தூண்ட , மண் பார்த்து நடக்கிறாய்,
நான்
உன் கால்விரல் தூசியை சபிக்கிறேன் என்னவளை அழுக்கக்கதே என,

ஒற்றை ரோஜா உன்னால் சூடப்படும் போது,
உலக
மலர்களெல்லாம் தான் மனஸ்தாபப்படும்.

அருகில்
வந்து என்னை பார்த்து முத்துக்களை சிரிப்புகளால் உதிர்க்கிறாய், இதற்க்காக எத்தனை தடவை வேண்டுமானால், கோமாளியாக மாறத்தயார்.

உன் சிரிப்புக்கு காரணம் நான் யோசித்து கொண்டு இருக்கின்றேன், பின்னால் வந்த உன்தந்தை என் கனவுலகை உடைத்து, என்னை உடைக்க வருவதை அறியாமல்.

வெள்ளி, 12 டிசம்பர், 2008

நித்தியமானவள்


உன்னிடம் சரணடிய வைத்து விட்டாய்,
இப்போது உன்னை விரும்புகின்றேன்.
நீயோ எப்போதும் என்னை விரும்பிக்கொண்டிருக்கிறாய்

வா வந்து விடு இரு வரும் தழுவிக்கொள்ளலம்,
யார் பார்த்தல் நமக்கென்ன?
கூச்சத்தை விட்டு விட்டேன்.

யார் என்னை சுற்றி இருப்போர்?
நான் இவர்களை நாடிய போது உதாசினபடுதியவர்கள் தானே இவர்கள்,
உன்னை நான் விரும்புவதை தடுக்க வந்த உறவினர்கள்.

என்னவள் கூட என்னை தீண்ட விரும்ப வில்லை - ஆனால்
நீ என்னை எப்போதும் அணைக்க துடித்துக்கொண்டு இருக்கின்றாய் .

யார் தடுத்தாலும் நான் உன்னை சேர்வதை தடுக்க இயலாது.
வரட்டும் நெஞ்சில் உறுதியுடன் தான் இருக்கின்றேன்.
நான் உன்னை இப்போது வெறுக்க வில்லை.

நான் காதலித்த பெண் கூட என்னை எப்போதுமே விரும்பியதில்லை
நீயோ எப்போது வந்தாலும், ஏற்று கொள்ள தயாராய் இருக்கிறாய்,

யாரவது உன்னை தடுத்தால்,
அவர்களை தண்டிக்க தயாராகத்தான் இருக்கிறேன்
வா சீக்கிரம், உன்னுடன் ஐக்கியமாகிறேன்,


உலகில் அதிகம் வெறுக்கப்படுவவள் நீதான் என்றாலும்
உன்னவர்களை அடைந்து விடுகிறாய் உன் காத்திருப்பால்.

யப்பா என்ன ஒரு மென்மை, என்ன வாசம்?
உன்னை போ யாருமே இவ்வளவு அழகை தழுவியது இல்லை
பூவாசம் நாசியை அடைக்கிறது

ஐயோ மகனே போயிட்டயே என் யார் யாரோ கத்திக்கொண்டு இருக்க
இந்த "என் உடல்" எனப்பட்ட வஸ்து அமைதியாய்
கல்லறைக்கு சென்று கொண்டிருந்தது.

கவிதை வானில் காதல் தூறல்கள்

கவிதை மலைச்சாரலில்,
அனிச்சை பூக்களை
தொலைவில் வைத்து ரசிப்போம்
நாம் ரசிப்பது தெரிந்தால்
அது உடனே வாடிவிடும் என்பதால்.

**********************************

பூவுக்குள் முள்
என்னவள் இதயத்தில்
என் எதிரி

**********************************

யாரவன் என்னவள் வீட்டுக்கருகில்
கட்டி வைத்திருந்த நிலவை
வானில் வீசியவன்?

**********************************

பிழைத்து போகட்டும்
என்று பர்வைகணையை திருப்பி விடாதே
சுகமான சாவு மிக பிடித்து இருக்கிறது

**********************************

காதல் கனவுகள்,
மறக்க செய்கின்றன
என் வயிற்று பசியை

**********************************

காதல் வேண்டும், காத்திருத்தல் வேண்டும்,
என்னவள் என் மீது, எனக்காக,
என் கல்லறையிலாவது

**********************************